ஜனவரி 9- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை ஜனவரி 12- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 13- ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும். ரூபாய் 1,000 ரொக்கத்துடன், பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் பரிசுத்தொகுப்பாக ஒரே நேரத்தில் தரப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.