/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt 89999_4.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதால் ஊழியர்கள் பரிசோதனை செய்ய பொதுத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
முதன்மை செயலாளர் உத்தரவில், 'அனைத்து அரசு துறைகளும் மருத்துவ உபகரணங்களை வாங்கி பரிசோதனை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். ஊழியர்களின் ஆக்சிஜன் அளவு போன்றவற்றைப் பரிசோதித்து அறிக்கை அனுப்ப வேண்டும். தேவையான பல்ஸி ஆக்சி மீட்டர் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவிகளை வாங்கி வைக்க வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்படும் அதிகாரிகளுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us