/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TN GOVT 899.jpg)
மே 18- ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மே 18- ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் தமிழக அரசு அலுவலகங்கள் செயல்படும். வாரத்தில் சனிக்கிழமை வரை ஆறு நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படும். ஊழியர்களை இரண்டு குழுவாக பிரித்து வாரத்தில் ஆறு நாளும் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும்.
முதல் குழு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமையும், இரண்டாம் குழு புதன்கிழமை, வியாழக்கிழமையும், மீண்டும் முதல் குழு வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பணிபுரியும். 'A' பிரிவு அதிகாரிகள், அலுவலக தலைமை பொறுப்பில் உள்ளோர் அனைத்து வேலை நாளும் பணிபுரிய வேண்டும். அலுவலக பணிக்கு வராத பணியாளர்கள் மின்னணு முறையில் அலுவலகத்துடன் இணைந்திருக்கவேண்டும்.
தலைமை செயலகம் முதல் மாவட்ட அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தமிழக அரசு அலுவலகங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். அரசு ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக பேருந்து வசதி செய்து தரப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us