Published on 17/10/2020 | Edited on 17/10/2020

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 11 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 12.34 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இதில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், கணக்கில் வராத ரூபாய் 5.25 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. அதேபோல், சென்னையில் மூன்று அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 2.70 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ரூபாய் 2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.