tamilnadu government medical college hospitals deans transfer

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் டீன்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, சிவகங்கை அரசு மருத்துவமனை டீனாக இருந்த சங்குமணி, விருதுநகர் அரசு மருத்துவமனையின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட அரசு மருத்துவனையில் டீனாக இருந்த அசோகன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் டீனாகவும்; கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் டீனாக இருந்த முத்துச்செல்வன், கரூர் அரசு மருத்துவமனையின் டீனாகவும்;தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாக இருந்த ரேவதி பாலன், சிவகங்கை அரசு மருத்துவமனை டீனாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அதேபோல், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவப் பிரிவு பேராசிரியர் டி. நேரு,தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் டீனாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.