2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.

Advertisment

tamilnadu government loan dmk party member duraimurugan question

நான்காவது நாளான இன்று (19/02/2020) சட்டப்பேரவையில் விவாதத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் கடன் குறித்து திமுக கவலைப்பட வேண்டாம் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு பதிலளித்தார். மேலும் தற்போதுள்ள ரூபாய் 4 லட்சம் கோடி கடன் என்பது 10 ஆண்டுக்கு முன் இருந்த ரூபாய் 1 லட்சம் கோடிக்கு சமம் என்று கூறினார். அதேபோல் விடுபட்ட அனைவருக்கும் பயிர்காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சு மிட்டாய் போல் உள்ளது என்றார்.