Advertisment

துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தகவல்.

Advertisment

tamilnadu government invites all parties meeting deputy cm ops organised cm not participated

ஆனால் அ.ம.மு.க கட்சியின் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டமானது இன்று மாலை 05.30 மணிக்கு தமிழக தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. திமுக கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துறைமுருகன் பங்கேற்க உள்ளன.

all parties meeting deputy cm ops organized not participate in cm Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe