தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை (23/03/2020) காலை வரை நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை (14 மணி நேரம்) சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர்.

tamilnadu government imposed new order based coronavirus

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பொது மக்களின் நலன் கருதி நாளை காலை 05.00 மணி வரை ஊரடங்கு தொடரும். அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்படுகிறது. தொடர் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்." இவ்வாறு தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.