Advertisment

கேட்பாரற்ற சடலங்கள்!- தகனம் செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை பிணவறைகளில் உரிமை கோரப்படாமல் வைக்கப்பட்டுள்ள சடலங்களை, தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் மரணமடையும் நபர்களின் உடல்கள், அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டு, 10 நாட்களுக்குப் பின் அவற்றை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tamilnadu government hospital chennai high court

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்கள் மயானங்களில் புதைக்கப்படுவதால்,இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்தச் சடலங்களை தகனம் செய்வதற்கு அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 'ஜீவாத்மா கைங்கர்ய' அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், "அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களைத் தகனம் செய்வதற்கு, பிற மாநில நீதிமன்றங்கள் அனுமதியளித்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்குகளைக் காரணம் காட்டி, புதைக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.தகனம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சடலங்களின் முடி, ரோமம், நகம் போன்றவை எடுத்து பாதுகாக்கப்படுவதால்,அடையாளம் காண்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.தகனம் செய்வதால் அதிக செலவும் ஏற்படாது"என மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

chennai high court GOVERNMENT HOSPITALS
இதையும் படியுங்கள்
Subscribe