பாலியல் வன்கொடுமை குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்குவதற்காக தமிழக அரசு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், புதிய திட்டத்தைத் தொடங்கியதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
அதில், 'வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூபாய் 2 கோடி இடைக்கால நிவாரணமாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.