தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படியின் நிலுவைத்தொகை வழங்குவதும் அடுத்தாண்டு ஜூன் 30- ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஏற்கனவே நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே,தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைப்பதாக, தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.