Advertisment

தமிழகத்தில் இ-பதிவு முறை அமலானது!

tamilnadu government e pass is mantatory

Advertisment

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிபோடும் பணிகள் ஆகியவற்றைதமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இ-பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு, முதியோர் தேவைபோன்றவற்றுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisment

https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்திற்குச்சென்று இ-பதிவுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

coronavirus lockdown tn government
இதையும் படியுங்கள்
Subscribe