கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையானஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மூன்று நாட்கள் முழுமையானஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் சில இடங்களிலும் முழுமையானஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நாளை (26/04/2020) காலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shops8999.jpg)
\முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதலே பொதுமக்கள் கடைகள் முன் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk stalin8999.jpg)
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாளை முதல் முழுஊரடங்கு உள்ளதால் இன்று கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும். தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி மக்கள் பொருட்கள் வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான பொருட்கள் வீதிக்கு வருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக வாய்ப்புள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)