Skip to main content

எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு விரும்பவில்லை: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Published on 13/05/2018 | Edited on 13/05/2018


 

sv sekar gr

 

 


எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருப்பது மாநில அரசு அதை விருப்ப வில்லை என்பதையே காட்டுகின்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட  செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் சந்தித்தார். 
 

அப்போது, 22 அரசு பல்கலைகழகங்களில் 21 பல்கலை கழகங்களில் துணை வேந்தர்கள் செயல்பாடுகள் கேள்விகளை எழுப்புகின்றது என தெரிவித்த அவர், துணைவேந்தர் நியபனம், நிர்மலா தேவி விவகாரம் உள்ளிட்டவற்றில் தெளிவான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
 

கல்வி உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் சரியாக பின்பற்றப்பட வில்லை என தெரிவித்த அவர், மாணவர் வருகை குறைவு என காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
 

மேலும் ஆச்சி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சரியானதல்ல என தெரிவித்த ஜி.ராம்பிருஷ்ணன், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி பிரச்சினையில் சிக்கி இருக்கும்  உற்பத்தியாளர்களின்  கோரிக்கையனை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வால்மார்ட் நிறுவனம் சந்தையில் நுழைந்து இருப்பது ஆபத்தானது, இதை எதிர்க்க வேண்டும் என்றார்.
 

 

 

நடிகர் எஸ்வி சேகர் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையிலும், அவரை கைது செய்யாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவரை கைது செய்யமல் இருப்பது  மாநில அரசு அதை விருப்ப வில்லை என்பதையே காட்டுகின்றது எனவும் தெரிவித்தார். 
 

சிபிஎம் கட்சியை பொறுத்த வரை பா.ஜ.க எதிர்ப்பு முதன்மையானது எனவும், அகில இந்திய அளவில் மாநிலத்திற்கு ஏற்றவாறு கூட்டணிகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்த அவர்,பாலகங்காதார திலகர் பயங்கரவாதி என்று ராஜஸ்தான் மாநில பாடபுத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பது தவறான தகவல் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

ஐபிஎஸ் அதிகாரிகள் 33 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


 

Next Story

“பாதிப்புகளை மன்னிப்பினால் சரிக்கட்ட முடியாது” - எஸ்.வி. சேகர் மனுவைத் தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

 court dismissed SV Shekhar's petition

 

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதியப்பட்டது.

 

அதேபோன்று கடந்த 2020 ஆம் ஆண்டு சமூக வலைத்தளப் பக்கத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாகவும் யூட்யூபில் தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிந்தனர். இது தொடர்பான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

 

இந்த நிலையில் இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டிருப்பதாக எஸ்.வி. சேகர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிக்கட்டிவிட முடியாது. தனக்கு வந்த தகவலை ஃபார்வர்டு செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பு. எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.