விவசாயம் இல்லாமல் தினசரி வாழ்க்கையை கடத்தவே சிரமப்பட்டு வரும் விவசாய கூலித்தொழிலாளிகளுக்கு ஏழைக்கேற்ற எல்லுருண்டையாக இருந்துவந்த 100-நாள் வேலைத்திட்டத்தை தமிழக அரசு சீரழித்துவிட்டது. அதனை கண்டித்து வரும் 24ம்தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உண்ணாநிலைப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர் அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தினர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஒவ்வொரு ஊராட்சி கிராமத்திலும் தினசரி 300 பேரில் இருந்து 500 பேருக்கு வழங்கி வந்த நூறுநாள் வேலை இன்று 5 பேர் 10 பேர் என சுருங்கிவிட்டது. விவசாயம் இல்லாத குறையை போக்கிவந்த 100 நாள் வேலைக்கும் தமிழக அரசு மூடுவிழா கானத் துடிக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் விவசாய தொழிலாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Tamilnadu government damaged a hundred-day program: workers end strike

Advertisment

மாநிலதலைவர் லாசர் கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் 100 நாள் வேலைத்திட்ட நிதியின் கீழ் தமிழகம் முழுவதும்60 லட்சம் மதிப்பீட்டில் 60 கோடி ரூபாயில் ஊரக மகளிர் விற்பனைக் கூடங்கள் கட்டப்படும் என அறிவித்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அது பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. அதோடு புதிய உத்தரவுகளும் வெளியிட்டுள்ளனர். அதனை உடனே திரும்பபெறவேண்டும். அதே போல தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 24 கோடியை ஒதுக்கியதாக கூறினார். அது மாநில நிதியா, மத்திய அரசின் நிதியா என்பதும் அந்த நிதி என்ன ஆனது என்றும் புரியவில்லை.

Advertisment

ஏற்கனவே கை நடவு பணிக்கு சாவுமணி அடிக்கும் விதமாக இயந்திரங்களை கொண்டு நடவு செய்பவர்களுக்கு மாணியம் அறிவித்து கூலி விவசாயிகளை வஞ்சித்தது தமிழக அரசு. தற்போது மத்திய அரசால் வழங்கபட்டுவரும் 100 நாள் வேலைக்கும் வேட்டுவைத்துவிட்டது”. என்றார்.