Skip to main content

"தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்"- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

 

tamilnadu government cuddalore collector meet dmk leaders coronavirus prevention

 

கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை மற்றும் நோய்த் தொற்று தொடர்பான நடவடிக்கைகளும், தகவல் வெளியீடுகளும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

 

அதையடுத்து கடலூர் கடலூர் மாவட்ட தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ,  கடலூர் எம்.பி ரமேஷ் மற்றும் எம்.எல்.ஏக்கள் சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன் ஆகியோர் நேற்று (06/07/2020) கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரியைச் சந்தித்தனர். அப்போது கரோனா தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 32 கோரிக்கை மனுக்களை வழங்கி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், அவற்றுக்கான பதிலையும் மாவட்ட மக்கள் அறியும் வகையில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டனர்.

 

பின்னர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் போது, "தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்காமல் ஆளும் அ.தி.மு.க அரசு செயல்படுவதால் கிராமங்களில் கூட கரோனா தொற்று அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது. கரோனா தொற்று பாதிப்பு தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையிலும் கட்டுப்படுத்தப்படாததால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.    

 

tamilnadu government cuddalore collector meet dmk leaders coronavirus prevention

 

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக அரசிடம் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற்று ஒரு நிலைப்பாட்டில் வைரஸ் தாக்கத்தின் தன்மையைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதமே அறிவுறுத்தியிருந்தார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கட்சிகளை உதாசீனப்படுத்தி 'மக்களை நாங்கள் காப்பாற்றுவோம்' எனப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது கடவுளைக் கை காட்டுகிறார்.  

 

அரசு நோயின் தன்மையை அலட்சியமாகக் கையாண்டதால் தற்போது கையை விட்டுப் போச்சு கட்டுப்படுத்த முடியவில்லை என்கின்றனர். பிற மாநில முதல்வர்கள், மாற்றுக் கட்சியினர், எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும் போது எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தனித்துச் செயல்படுகிறார். இனியாவது அனைவரின் கருத்துகளையும் கேட்டு கரோனாவைக் கட்டுப்படுத்த, தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

இந்தியாவிலேயே அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்வதாக பொய்யாகக் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்தும், கோயம்பேடு மார்க்கெட்டை மூடியிருந்தாலும் கரோனா தொற்று பரவாமல் தடுத்திருக்க முடியும். தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளால் மாநிலத்தில் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு வருமானம் இல்லாமல் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.