தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 134.63 கோடி நிதி வந்துள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கரோனாவைத் தடுக்க மக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் அளித்த நிவாரண நிதியின் விவரத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் ரூபாய் 1 கோடி நிவாரண நிதி அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கரோனா தொற்றைக் கண்டறிய தமிழக அரசுக்கு ரூபாய் 8 கோடி மதிப்பிலான 40,032 PCR கருவிகளைத் தந்தது டாடா நிறுவனம். தமிழகத்திற்கு உதவிய டாடா நிறுவனத்திற்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.