தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் நிவாரண உதவி வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், சிறிய படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரியும், ஊரடங்கு காலத்தில் மீனவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு தலா 500 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கக்கோரியும், மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

Advertisment

tamilnadu government chennai high court

அந்த மனுவில், கரோனா ஊரடங்கு காலத்தில் மீன் கடைகளுக்கு விலக்கு அளித்தபோதும், மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுவதால், மீனவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment