Advertisment

விவசாய சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

Advertisment

இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பல கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்க உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், விவசாய சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Tamilnadu Government Call for Agriculture Societies
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe