இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. தமிழகத்திலும், கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் பெரும் அளவில் உள்ளது. இதனால், வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளியூர் செல்லும் மக்களின் கூட்டம் பேருந்து நிலையங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டமாகக் குவிந்தனர். எந்தப் பேருந்திலும் முன்பதிவு இல்லாததால் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.