Advertisment

தலைவர்கள் சிலைக்கு மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவிப்பர்- தமிழக அரசு அறிவிப்பு!

தலைவர்கள் சிலைக்கு மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவிப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஏப்ரல் 14- ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். அதேபோல் ஏப்ரல் 17- ஆம் தேதி தீரன் சின்னமலையின் பிறந்த நாளிலும் ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

Advertisment

tn gvot

ஊரடங்கு இருக்கும் வரை பொது நிகழ்வுகளுக்கு ஆட்சியர் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். 144 தடை உத்தரவால் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துக் கொள்ள வேண்டாம். தலைவர்களின் நினைவிடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், விழாக்களை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ர

தலைவர்களின் பிறந்த நாளில் வழக்கமாக அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

District Collectors tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe