Advertisment

'ஊரக பகுதிகளில் சலூன் கடைகளைத் திறக்க அரசு அனுமதி'- முதல்வர் பழனிசாமி!

tamilnadu government allowed barber shops

Advertisment

ஊரக பகுதிகளில் நாளை (19/05/2020) முதல் சலூன் கடைகளைத் திறக்கலாம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை நாளை (19/05/2020) திறக்கலாம். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து முதல்வர் உத்தரவு. முடி திருத்தும் பணியாளர்கள் தனிமனித இடைவெளி, கையுறை, மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி சோப்புக் கொண்டு கை கழுவ வேண்டும். கடைகளில் ஒருநாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியைத் தெளிக்கவும் உத்தரவு. சலூன் கடைகளுக்கு மேலும் விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும். சென்னை, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சலூன் கடைகளைத் திறக்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ANNOUNCED government Tamilnadu BARBER SHOP
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe