ADVERTISEMENT

தமிழக அரசின் ஆலோசகர் சண்முகம் ராஜினாமா!

03:12 PM May 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்றத் தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்க உள்ளார். இதற்காக நாளை (04/05/2021) மாலை 06.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

இந்நிலையில், திமுக ஆட்சி அமைய உள்ளதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய்நாராயண், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக பணியாற்றி வந்த நிலையில், தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் வழங்கினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT