Advertisment

கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்- மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 111- வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

Advertisment

“திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம். சர்வாதிகாரம் தலை தூக்கி வரும் நிலையில் ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது, தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை நிலவுகிறது. தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்.

Advertisment

TAMILNADU FORMER ANNA 111TH BIRTHDAY ANNIVERSARY MDMK Festival Conference began

தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும், மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. நம்முடைய போராட்டங்களின் முன்னணி போர் வாள் வைகோ. திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம்.தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார்" என்றார் ஸ்டாலின்.

Speech DMK MK STALIN MDMK MEETING anna 111th birthday celebration Tamilnadu
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe