Advertisment

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்குமா 13 வாக்குச்சாவடிகளின் மறு தேர்தல்?

தமிழகத்தில் சுமார் 13 வாக்குச்சாவடிகளில் மே -19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். அதே போல் எந்தெந்த மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடைப்பெறும் என்பது தொடர்பான விவரங்களை வெளியிட்டார். இதன் படி தருமபுரி மாவட்டத்தில் சுமார் 8 வாக்குச்சாவடி மையங்களிலும் , கடலூரில் 1 வாக்குச்சாவடியிலும் , திருவள்ளூரில் 1 வாக்குச்சாவடியில், தேனி மாவட்டத்தில் 2 வாக்குச்சாவடிகளிலும் , ஈரோடு மாவட்டத்தில் 1 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை: 7.00 மணி முதல் மாலை ; 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது.

Advertisment

EVM

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அத்துடன் இந்திய மக்களவை தேர்தல் உட்பட அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே -19 ஆம் தேதி முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை மே -23 ஆம் தேதி நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் இந்த 13 வாக்குச்சாவடிகளில் சுமார் 45000 பேர் வாக்களிக்க உள்ளனர். இதனால் தமிழககத்தில் ஐந்து மக்களவை தொகுதிகளில் வெற்றி , தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் மாறியுள்ளனர். இதன் தாக்கம் வாக்கு எண்ணிக்கை தினம் அன்று வெளிப்படும். அதே போல் தமிழகத்திலும் இந்த 13 வாக்குச்சாவடிகளின் மறு வாக்குப்பதிவு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது என்றே கூறலாம். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் கட்சியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மறு தேர்தலின் போது 25000 பேர் வாக்களிக்க உள்ளனர். இதன் விளைவாக தேர்தல் முடிவில் அதிரடி திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lok Sabha election POLLING STATIONS Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe