Advertisment

வரலாற்றில் முதல்முறை... டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக பாதிரியார்!

For the first time in history ... Priest as a member of TNPSC!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி) நான்கு புதியஉறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு தற்போது நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 62 வயதை எட்டும்வரைஉறுப்பினர் பதவியில் நீடிப்பர்.

Advertisment

முனியநாதன் ஐ.ஏ.எஸ்:சென்னையைச் சேர்ந்த முனியநாதன் 2009ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் முடித்தவர். முதுகலை பொருளாதாரம்உள்ளிட்ட நிதி சார்ந்த படிப்புகளைப் பயின்ற முனியநாதன், நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். தற்போதுதொழிலாளர் நல ஆணையராக இருக்கிறார்.

ஜோதி சிவஞானம்:சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கிறார். பொருளாதாரப் படிப்பில்முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் உள்ளார். அதேபோல் அம்பேத்கர் பொருளாதார மையத்தின் இயக்குநராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

முனைவர் அருள்மதி:சென்னை எத்திராஜ் கல்லூரியின்உயிர் வேதியியல்பேராசிரியர். அத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

ராஜ்மரியம்சூசை:சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பணியாற்றிவருகிறார். இவர் ஒரு பாதிரியார் ஆவார். ஒரு பாதிரியார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

TNGovernment TNPSC EXAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe