தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தேர்தல் வாக்குப்பதிவு வடபழனியில் உள்ள திரைப்பட இயக்குனர் சங்க வளாகத்தில் இன்று காலை தொடங்கிய நிலையில், மாலை 04.00 மணிக்கு வாக்குபதிவு நிறைவு பெற்றது. இந்நிலையில் பதிவான வாக்குகள் என்னும் பணி மாலை 05.00 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே செல்வமணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகரை சுமார் 1386 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

Advertisment

tamilnadu film directors association election deputy president ks ravikumar

இயக்குனர் சங்க தேர்தலில் தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 1503 வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் சங்கத்தின் இரு துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா போட்டியிட்டனர். கே.எஸ்.ரவிக்குமார் 1289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே போல் ரவிமரியா 1077 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.