தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், மாலை 04.00 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மாலை 05.00 மணிக்கு எண்ணப்பட்டு, இன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இயக்குனர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் போட்டியிடுகின்றனர்.
அதே போல் துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், வேல்முருகன் உள்ளிட்ட மூன்று பேர் களத்தில் உள்ளன. தேர்தல் நடைபெறாமல் தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இயக்குநர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தபால் வாக்குகள் உட்பட 1503 வாக்குகள் பதிவாகியுள்ளது.