சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை கழகத்தில் ஆயுதபூழை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இன்று நாடு முழுவதும் ஆயுத பூழை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆயுத பூழை விழாவில் கலந்து கொண்ட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விழாவை சிறப்பித்தார்.

Advertisment

மேலும் இந்நிகழ்ச்சியில் கழக துனை செயலாளர் எல்.கே.சுதிஷ், துனை செயலாளர் பார்த்தசாரதி, மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், தொழிற்சங்கத்தினர், நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயுத பூழை விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூழையில் கலந்து கொண்ட அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தலைமை கழகத்தில் பணிபுரிய கூடிய ஊழியர்களுக்கு ஆயுத பூஜைபொருட்களை வழங்கிய பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை செய்து கொண்டாடினார். உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் இருந்தார்.

Advertisment