Advertisment

தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

tamilnadu erode, tiruppur, chennai, coimbatore it raid

Advertisment

தமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றன.

வரி ஏய்ப்பு புகாரின் பேரில், தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றன. குறிப்பாக, ஈரோட்டைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல், கோவை தி.மு.கமாநகர் மேற்கு மாவட்டப்பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவலை அறிந்த அப்பகுதி தி.மு.க.வினர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் வீட்டின் முன் குவிந்துள்ளனர். மேலும், வருமான வரித்துறையினரின் சோதனையைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

it raid Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe