Advertisment

தமிழ்நாட்டின் மின்தடையை போக்க அரசு 258 கோடியே 94 லட்சம் செலவு

electricity

Advertisment

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் பல்வேறு மின் திட்டங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 30 மாவட்டங்களில் 52 திறன் மின் மாற்றிகள் மற்றும் 16 துணை மின் நிலையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று திறந்து வைத்தார். இதன் மதிப்பு 258 கோடியே 94 லட்சம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை மாதவரத்தில் உள்ள பால்பண்ணை வளாகத்தில் கட்டப்பட்ட ஆவின் மாநில மைய ஆய்வகத்தையும் முதல்வர் இன்று திறந்து வைத்தார். பணியின் போது உயிரிழந்த 50 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அமைச்சர் நாசர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe