தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்!

TAMILNADU ELECTRICITY BOARD OFFICERS APPOINTED TN GOVT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களைக் கைப்பற்றிய தி.மு.க. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அத்துடன் அமைச்சரவையும் பதவியேற்றது.

புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பல்வேறு அரசு பணிகளில் ராஜேஷ் லக்கானி பணியாற்றி உள்ளார். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மை செயலாளராக அவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAMILNADU ELECTRICITY BOARD tn govt
இதையும் படியுங்கள்
Subscribe