x

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகம் எழுந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தொடர்பாக புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, தமிழகத்தின் 6.28 கோடி வாக்காளர்களில், 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். ஆண் வாக்களர்கள் 2.26 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.31 பேரும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக 1.71 கோடி பேர் வாக்களிக்க வரவில்லை. சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.