ADVERTISEMENT

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சிறப்பு சலுகை சாமானியனுக்கு கிடைக்காதது ஏன்?

06:31 PM Apr 18, 2019 | elaiyaselvan

ADVERTISEMENT

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் மக்கள் வாக்களித்தனர்.

ADVERTISEMENT


நடிகர்கர்கள் ரஜினிகாந்த் , கமல் , அஜீத், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ்ச்சினிமா பிரபலங்கள் பலரும் கியூவில் நின்று வாக்களித்தனர். மேலும் திரைத்துறை பிரமுகர்கள் பலரும் தங்களது வாக்கினைப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க வந்திருந்தார்.

அந்த வாக்குச் சாவடியில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தார். வாக்களிக்காமல் சென்று விட்டார் என செய்தி பரவியது.
அதேசமயம்,

சிவகார்த்திகேயன், மதியம் இரண்டு மணிக்கு மேல் வாக்களித்ததாக ஒரு போட்டோ வெளியானது. இதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எப்படி வாக்களிக்க முடியும் என சர்ச்சைகள் வெடித்தன.

சிவகார்த்தியனும் அவரது மனைவி ஆர்த்தியும் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த தேர்தல் அலுவலர், தங்களது மேலதிகாரிக்கு தகவல் தந்திருக்கிறார்.


டி.ஆர்.ஓ. அந்தஸ்திலுள்ள அந்த மேலதிகாரி, பூத் அலுவலர்கள் மூலமாக பூத்திலிருந்த அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி, சிவகார்த்திகேயன் சேலஞ்ச் ஓட்டு போட அனுமதி பெற்றிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார் சிவகார்த்திக்கேயன். ஓட்டு போடும் போது கை விரலில் மை வைத்து கையெழுத்து பெற்றதோடு, கட்டை விரல் ரேகையையும் பெற்றுக்கொண்டனர். மதுரவாயல் தொகுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருப்பதால் அவரை இங்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வாக்களிக்க வந்த வாக்காளர்களோ, " எந்த வாக்குச் சாவடியில் ஓட்டு இருக்கிறதோ அங்கு தான் வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பூத்தில் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தது குற்றம்" என சர்ச்சையை கிளப்பினர்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பபட்டும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கர் இயக்குனர் ரமேஷ் கண்ணா உள்பட சாமானியர் பலரும் வாக்காளர் அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிவகார்த்திக்கேயனுக்கு கொடுக்கப்பட்ட சலுகை, சாமானியர்களுக்கு ஏன் தரவில்லை ? என்கிற கேள்வி, தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டும் பதில் இல்லை !

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT