Advertisment

"10 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்"- தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதனால்தமிழகத்தில் நடப்பாண்டு 10- ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்தன.

Advertisment

TAMILNADU EDUCATION MINISTER PRESS MEET

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். தேர்வு அட்டவணை மே 3-ம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும். ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒரு நாள் விடுமுறை விடப்படும். தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கானகட்டணத்தைச் செலுத்த நிர்பந்தித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

minister sengottaiyan PRESS MEET Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe