இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர். இதில் சேலம் உருக்காலை, ஏர் இந்தியா உள்ளிட்ட 50% நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்திலும் சேலம் உருக்காலையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

tamilnadu dmk mp kanimozhi meet with union finance minister nirmala sitharaman salem steel plant issue

இந்நிலையில்டெல்லியில் திமுக எம்.பி கனிமொழி சேலம் உருக்காலை அனைத்து தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகளுடன் சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சேலம் உருக்காலையின் நிதி நிலைமையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை மனுவை கனிமொழி எம்.பி அமைச்சரிடம் வழங்கினார்.