tamilnadu districts judges transfer

Advertisment

தமிழகம் முழுவதும், மாவட்ட நீதிபதிகள் 28 பேரை இடமாற்றம் செய்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ரவி, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம், சிவகங்கை, கடலூர், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.