
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை தொடரும். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 மணி நேரத்திற்கு (பகல் 12.00 மணி வரை) கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஜமீன், கொரட்டூர், ஊத்துக்கோட்டை தலா 6 செ.மீ., பூண்டி, திருவாலங்காட்டில் தலா 5 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் அம்பத்தூர் 4 செ.மீ., ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தலா 3.6 செ.மீ., கிண்டி 2 செ.மீ., அயனாவரம், பெரம்பூர் 1.9 செ.மீ., பதிவாகியுள்ளன.