தமிழக காவல்துறையில் மாவட்டம், மாநகரம், ஓசிஐயு, சிபிசிஐடி, எஸ்பிசிஐடி, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, எஸ்ஐயுஎஸ்டிசிஐடி, கியூ பிராஞ்ச், சீருடைப்பணியாளர் தேர்வாணையம், தலைமைச் செயலகம், பணியிடைப் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 311 உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி, டிஜிபி திரிபாதி ஜூலை 31- ல் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் பலர் 45 வயதைக் கடந்தவர்கள்.

Advertisment

TAMILNADU DGP TRIPATHY IPS ANNOUNCED 311 SI POLICE  PROMOTION

சேலம் மாவட்டக் காவல்துறையில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்கள் ஏ.உஷாராணி, டி.காந்திமதி, டி.சிவகாமி, டி.மனோன்மணி, எம்.வளர்மதி, வி.கோமதி (பிஆர்எஸ், சேலம்), சி.சுரேஷ், பி.பிரகாஷ், இ.ஆனந்தகுமார் ஆகியோர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோல் சேலம் மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் பி.பாபு, பி.ஜெகநாதன், பி.வேதபிறவி ஆகியோரும் ஆய்வாளராக பதவி பெற்றுள்ளனர்.