Advertisment

மாணவி மரணம்! டி.ஜி.பி. பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

Tamilnadu DGP transferred dindigul school girl case into CBCID

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் மலைக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த ஒன்பது வயது மாணவி, கடந்த ஒருவாரத்திற்கு முன்பு பள்ளியின் பின்புறம் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்தார்.

Advertisment

இது சம்பந்தமாக மாணவியின் தந்தை சத்யராஜ் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் கடந்த ஒரு வாரமாக தீவிர விசாரணை செய்துவந்தனர். அப்படியிருந்தும் குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவந்தனர். இந்நிலையில், மேல்மலை, கீழ்மலைப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாணவி மரணத்திற்குக் காரணமான குற்றவாளியைக் கைது செய்யக் கோரி ஆங்காங்கே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல் நேற்றும் (22.12.2021) திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி குரல் கொடுத்தனர். இந்நிலையில்தான் திடீரென இந்த வழக்கைசி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் மாணவி மரணத்தில் உள்ள மர்மம் கூடிய விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

DGPsylendrababu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe