Advertisment

ஜெயலலிதாவின் கொள்கைப்படி அரசு நல்ல முடிவு எடுக்கும் - துணை முதல்வர் ஓ.பி.எஸ்!

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10% இட ஒதுக்கீடு குறித்து பேசுகையில், 21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், அந்த கட்சித்தலைவர்கள் ஒவ்வொரு வரும் நல்ல கருத்துக்களை கூறியதாக தெரிவித்தார். ஜெயலலிதா கொள்கையின் படி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisment

TAMILNADU DEPUTY CM SAID 10% QUOTA TAKE GOOD DECISION ANNOUNCED

இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும், அதே சமயம் ஜெயலலிதா கொண்டு வந்த 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அரசு நல்ல முடிவை எடுக்கும் என தெரிவித்தார். 10% இட ஒதுக்கீட்டில் அதிமுக ஆதரவா? அல்லது எதிர்ப்பா? என்பது தொடர்பான நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
10% QUOTA DEPUTY CM PANEER SELVAM GOOD DECISION WILL SOON ANNOUNCED Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe