/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops_79.jpg)
மாணவர்களின் நலனில் அரசு உறுதுணையாக இருக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தருமபுரி மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு மாணவர் மோதிலால் ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற துயரச் செய்திகள் எனது வேதனையையும் மன வலியையும் அதிகரிக்கின்றன. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
நீட் வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு; மாணவர்களின் நலனில் அக்கறைகொண்ட அதிமுக அரசு என்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தவறான விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)