/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops1 (1).jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93 வயது) உடல் நலக்குறைவால் காலமானார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வரின் தாயார்தவுசாயம்மாள் மறைவுக்கு தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சேலம் செல்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய நிலையில், நேரில் செல்ல உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)