சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் கே.பி.முனுசாமி எம்.பி., முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அக்டோபர் 7- ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அப்போது, நாளை தமிழக முதல்வர், ஜெ.வின் அரசியல் வாரிசு, வருங்கால அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ். என ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.