சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (14.03.2023) தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், நாடு முழுவதும் தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்குஎதிராகஒன்றிய அரசும்தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.