சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் நகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, மாவட்ட கல்வி அதிகாரி மோகன், நகர டெங்கு ஒழிப்பு திட்ட இயக்குநர் எழில்மதினா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு டெங்கு குறித்து மாணவிகள் மத்தியில் விளக்கி கூறினார்கள். இதனைதொடர்ந்து மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.