தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a62d5f1c-2538-4c5e-869b-e27dc3417f6b11111.jpg)
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தகவலை அரசு முழுமையாக வெளியிடவில்லை. காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காய்ச்சல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Follow Us