குடியரசு தின அணிவகுப்பு; ‘மறுப்பும், அனுமதியும்’ - எகிறும் எதிர்பார்ப்பு

tamil nadu Decorative vehicles REPUBLIC DAY  DISPLAYED

டெல்லியில் கடந்த ஆண்டுநடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காகதமிழக அரசின் சார்பில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த வீரர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றதோடு, தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த ஆண்டு தமிழகத்துடன்சேர்த்து கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கும்அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த இரு மாநிலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe