தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாட்டின் முத்திரை, தமிழ்நாடு என பெயர் சூட்டிய முன்னாள் முதலமைச்சர் அண்ணா மற்றும் தமிழ்நாட்டின் வரைபடம் ஆகியவற்றைக் கொண்ட மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த மணற் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். இந்த மணல் சிற்பத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisment