கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 2,60,566 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 1,36,01,694 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

TAMILNADU CURFEW VEHICLES POLICE

அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 2,45,097 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.